Government of Sri Lanka

இலங்கை

இலங்கை அதிகாரப்பூர்வ வலை போர்டல் அரசு

இணையத்தளம் வருகை

central province sri lanka flag

மத்திய மாகாணம்

இலங்கை மத்திய மாகாண சபை

இணையத்தளம் வருகை

Public Administration

பொது நிர்வாகம்

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு

இணையத்தளம் வருகை

Home

central province sri lanka flag

பிரதான செயலாளர் காரியாலயத்திற்கு உங்களை வரவேற்கிறோம்..!

பிரதான செயலாளர் காரியாலயம்-மத்திய மாகாண சபை, இலங்கையின் உத்யோகபூர்வ இணையத்தளத்திற்குப் பிரவேசித்துள்ள உங்களுக்கு எமது நன்றி. நாம் மத்திய மாகாண சபையின் கீழுள்ள அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கான நிர்வாகம், பணியாளர்-பயிற்சி, திட்டமிடல் மற்றும் நிதி நிர்வாக உத்திகள்உட்பட்ட பல்வேறு சேவைகளை வழங்குகின்றோம். எமது அதிகாரப் பகுதி கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. மத்திய மாகாண சபையின் பிரதான செயலாளர் காரியாலயம், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பில் 1988 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 13 ஆவது திருத்தத்திற்கமைய உருவாக்கப்பட்டது

திணைக்களங்கள்


Administration

நிர்வாகம்

இந்த நிறுனம் பிரதான செயலாளர் அலுவலகத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். மத்திய மாகாண சபையின் நிவாகத்தின் கீழ் வரக்கூடிய மற்ற திணைக்களங்களின் ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கு இது பொறுப்பாகும். இது பல நடவடிக்கைகளின் மையமாகவும் இந்நடவடிக்கைகளை ஒன்றிணைக்கக் கூடியதாகவும் தொழிற்படுகிறது. இது கையாளும் தொழிற்பாடுகளின் தன்மைக்கேற்க அதாவது சட்ட நடவடிக்கைகள் முதல் ஒன்றிணைப்பு செயற்பாடுகள் வரை எண்ணிலடங்காத சிக்கலான சந்தர்ப்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.


Personal & Training

மனித வள முகாமைத்துவமும் பயிற்சி அபிவிருத்தியும்

ஆளணி மற்றும் பயிற்சி பிரிவு வருடாந்த பயிற்சி திட்டத்தின்படி பயிற்சி திட்டங்களை வடிவமைத்தல், தேவையான வளவலாளர்களை உருவாக்கிகக் கொள்ளல், பயிற்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்தல், அதனை அமுல் நடத்தல் ஆகியன இதன் பொறுப்புக்கலாகும். மேலும், தேவையான பயிற்சி நெறிகளை அடையாளம் காண நடாத்துவதுடன் பயிற்சி பொருட்கள், பயிற்சிதிட்டம் தயாரித்தல், வளவலாளர்களை அடையாளம் காணல், பயிற்சி திட்டப்படி பயிற்சி நெறிகளை நடாத்துதல், இறுதியில் பின் மதி;ப்பீடு செய்தல் என்பதே இதன் பொறுப்புக்கலாகும்.


planning dept

மாகாணத் திட்டமிடலும் கண்காணிப்பும்

மத்திய மாகாண சபையின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு அலகானது மாகாண திட்டமிடல் செயற்பாட்டின் இதயமாகத் தொழிற்படுகிறது. இது மத்திய மாகாண பிரதம செயலாளரின் கீழ் நேரடியாக வரக்கூடியதொன்றாகவும் ஒட்டு மொத்தத் திட்டமிடல் கண்காணிப்பு மற்றும் அபிவிருத்தி செயற் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் அமைச்சுகள் மற்றம் துணை தேசிய மட்டத்திலுள்ள திணைக்களங்களினால் நடத்தப்படுகின்ற செயல்திட்டங்களுக்கு பொறுப்பாக இருக்கும்.


provincial treasury

மாகாணத் திரைசேரி

மாகாணத் திரைச்சேரியானது அமைச்சுகளுக்கு மூலோபாய நிதி உதவிகளை வழங்குவதன் மூலமும், நிதி வளங்கள் கிடைக்கப்பெறுகின்ற தன்மையை விருத்தி செய்வதன் மூலமும் மத்திய மாகாணத்திலே எதிர்பார்க்கப்பட்ட சமூக, பொருளாதார மற்றும் நல்லாட்சியின் விளைவுகளை எய்துவதிலே பெரும்பங்கு வகிக்கிறது. இது மாகாணத்தின் கடன் பெறல் மற்றும் நிதி வழங்கல் ஆகியவற்றைக் கண்காணிப்பதும் வங்கி நடவடிக்கைகள் மற்றும் பணம் என்பவற்றையும் முகாமைப்படுத்துகின்றது.

பிரதான செயலாளரின் செய்தி

மத்திய மாகாண சபையானது 1987 இன் மாகாண சபைத் திருத்தச் சட்டம் இல.42 இற்கமைய இலங்கை ஜனநாயக குடியரசின்  13 ஆவது திருத்தின்படி உருவாக்கப்பட்டது. இது கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.

மாகாண சபை முறைமையின் கீழ்  05 அமைச்சுக்கள் மற்றும் 29 திணைக்களங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 53,000 இற்கு மேற்பட்ட உத்யோகத்தர்கள் சேவை புரிகிறார்கள். மக்கள் பங்குபற்றுதலை ஊக்குவிக்கும் முறைமையின் ஊடாக மக்களை மையமாக கொண்ட சேவையை வழங்குவதே மாகாண சபை முறையின் நோக்காகவுள்ளது.

எமது இந்த முயற்சியின் முக்கியமான நோக்கமாகவுள்ளது மஹிந்த சிந்தனையினை அடியொட்டி இலங்கையை ஆசியாவின் ஆச்சர்யமாக மாற்றும் பொருட்டு செயற்படுவதாகும்.

சினேகபூர்வ மக்கள் சேவையை வழங்குவதில் காணப்படும் பிரச்சினைகளைக் கலைவதற்கான முறையொன்று ஆராயப்பட்டுள்ளது. அதனால் அனைத்துக் கருமங்களையும் மாகாண தந்ரோபாய நோக்குத்திட்டத்தின்படி முன்னெடுப்பது இலகுவாகின்றது.

இம்முறைகளை நடைமுறைபடுத்துவதற்காக புதிய தகவல் தொழிநுட்ப தந்ரோபாய நோக்குத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதனால் மஹிந்த சிந்தனையின் கீழான ஈ-ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக அனைத்து மாகாண சபை உறுப்பினர்களிர்களினதும் விபரங்களை உள்ளடக்கிய விபரக்கோவையொன்றை விரைவாக நடைமுறைப்படுத்துவது சாத்தியப்பட்டுள்ளது.

மாகாண சபையினுல் துல்லியமான கணக்கியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மின்னியல் கணக்குப் பொறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் இலத்திரனியல் விபரக் கோவை முறையினை அறிமுகப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ளேன். அத்துடன் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த தகவல்களை இலகுவாகப் பெறும் பொறுட்டாக கணணி மயப்படுத்தப்பட்ட தகவல் திட்டமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மேலும் மத்திய மாகாண ஆளுனர் கெளரவ. டிகிரி கொப்பேகடுவ, கெளரவ சரத் ஏகநாயக, கெளரவ. சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் என்போரின் ஒத்துழைப்புக்காகவும் சேவைக்காகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

The Chief Secretary of Central Provinceதிரு சரத் பிறேமவன்ச
மத்திய மாகாண பிரதம செயலாளர்

மத்திய மாகாணத்தில் வழங்குனர்களை பதிவூ செய்தல் 2017

supplier register

மத்திய மாகாணத்தில் வழங்குனர்களை பதிவூ செய்தல் 2017 Download PDF

முன் பிள்ளை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

முன் பிள்ளை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

பதிவுசெய்தல் மற்றும் தரப்படுத்தல்

கட்டமைப்பு ஒப்பந்தக்கார்களையும், பராமரிப்பு  ஒப்பந்தக்காரர்களையும், பதிவுசெய்தல் மற்றும் தரப்படுத்தல் - 2017

Contruction

தொலைபேசி அடைவு

மத்திய மாகாணம் அனைத்து அரசு அலுவலகங்கள் பற்றி தொடர்பு விவரங்கள் பதிவிறக்க கிடைக்க விரிவான தொலைபேசி அடைவு காணலாம்.

Telephone directory of Central provincial council Sri Lanka

பதிவிறக்கம்

தேடுக

பொது சேவை மேலாளர்கள் விவரங்கள் (ICT)

நிதி கட்டுப்பாடுகளை 2008

வெளிநாட்டு புலமைப் பரிசில் மற்றும் வெளிநாட்டு பயிற்சி வேலைத்திட்டம்

scholarship program

Training Programs

பார்வையாளர்கள்

இன்று24
நேற்று133
இந்த வாரம்157
இந்த மாதம்3247
அனைத்து நாட்கள்53788

Visitor IP : 54.204.211.128 Visitor Info : Unknown - Unknown செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017 04:13

Guests : 7 guests online Members : No members online
Powered by CoalaWeb
Joomla templates by Joomlashine