Homeதிணைக்களங்கள்மாகாண நிர்வாகம்

மாகாண நிர்வாகம்

administrationஇந்த நிறுனம் பிரதான செயலாளர் அலுவலகத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். மத்திய மாகாண சபையின் நிவாகத்தின் கீழ் வரக்கூடிய மற்ற திணைக்களங்களின் ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கு இது பொறுப்பாகும். இது பல நடவடிக்கைகளின் மையமாகவும் இந்நடவடிக்கைகளை ஒன்றிணைக்கக் கூடியதாகவும் தொழிற்படுகிறது. இது கையாளும் தொழிற்பாடுகளின் தன்மைக்கேற்க அதாவது சட்ட நடவடிக்கைகள் முதல் ஒன்றிணைப்பு செயற்பாடுகள் வரை எண்ணிலடங்காத சிக்கலான சந்தர்ப்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இந்த முறையான விஞ்ஞான ரீதியான அனுகுமுறை மூலமே இந்த பிரச்சினைகளைக் கையாள முடியும் என கிளை விளங்கி வைத்துள்ளது. எனவே, திணைக்களமானது அதனால் முடியுமான அளவு அதனது கடமைகளை நிறைவேற்றி மற்ற மாகாணங்களில் உள்ள இது போன்ற திணைக்களங்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளது.


இலக்கு

2016 ஆம் ஆண்டில் மிகவும்  உயர்ந்த மாகாண நிர்வாகத்தை நியமித்தல்.

பணிக்கூற்று

வெவ்வேறு பகுதியினர்களுக்கிடையில் அதிகமான தொடர்பாடலை கட்டியெழுப்புவதும் மற்றும் சிறந்த ஒருங்கிணைப்பினூடாக தொழில் மட்டத்தில் நிர்வாக அலகை நியமித்தல்

 


மகுட வாசகம்

மாகாண நிர்வாகத்திற்கான சமத்துவமும் ஒருமைப்பாடும்

சிறப்புகள்

அக்கறை
திறந்த மனப்பாங்கு
பொறுப்பு
உயர்வு

 


நோக்கங்கள்

 • பணிக்குழு அங்கத்தவHகள், மாகாணங்களின் நிறுவனங்கள், மத்திய அரசாங்கம் மற்றும் நிர்வாக விடயங்களிலுள்ள மற்ற துறைகள் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்ப்பை பேணுவதன் மூலம் பொது சேவை வழங்குவதில் உயர் நிலை அடைதல்.
 • கற்றல் சூழலை உடைய தலைமைத்துவத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய வளங்களை செயற்திறன் மிக்கதாக பாவித்தல்.

முக்கிய செயற்பாடுகள்

 1. நிர்வாக விடயங்களை ஒருங்கிணைப்பதுடன் மாகாண சபையின் கீழுலுள்ள நிறுவனங்கள், மத்திய அரசாங்கம் மற்றும் அரச சார்ப பற்ற நிறுவனங்கள், சHவதேச அரச சார்ப்பற்ற நிறுவனங்கள் மற்றும் பங்குபற்றும் தனியார் துறையினர் என்போருக்கு மத்தியில் நெருங்கிய உறவைப் பேணுவதுடன் நிர்வாக விடயங்களை ஒன்று சேர்த்தல்.
 2. சட்ட நடவடிக்கைகள் தொடர்பான தேவையான வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனை வழங்குதல் மற்றும் மாகாண சபை ஊடாக மற்ற சட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
 3. குறைகோள் அதிகாரி, மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு, பொது முறையீட்டுக் குழு, பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி விசாரணை அலகு என்பவற்றின் விசாரணைகள் மற்றும் பரிசோதனைகளை செய்வதற்கான தேவையான உதவிகளை வழங்குதல்.
 4. விஷேட நிழ்ச்சிகள் மற்றும் செயற்திட்டங்களை அமுல் நடத்துவதற்காக மாகாண பொது சேவையின் ஈடுபாடும் ஒருங்கிணைப்பும்.

 


விசாரணைகள்

பதவி தொலைபேசி இலக்கம்
பிரதான செயலாளலர் (நிர்வாகம்) +94 812 236754/+94 814 953241
சட்ட உத்யோகத்தர் +94 814 953243
உதவிச் செயலாளர் +94 814 953242
நிர்வாக உத்யோகத்தர் +94 814 953244
அலுவலகம் +94 814 953245 / +94 814 953246
மின்னஞ்சல் இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தொலைநகல் +94 812239075

 


மாகாண நிர்வாக அலுவலக ஒழுங்கமைப்பு

Organization Chart 


மாகாண நிர்வாகம்

 1. நிர்வாகப் பரிவின் உத்யோகத்தர்கள், மாகாண சபை மற்றும் மத்திய அரசின் உத்யோகத்தர்களின் சேமநல வேலைப்பாடுகள்.
 2. உத்யோகத்தர்களின் ஒழுக்க விழுமிய விசாரணைக்ளை அனைத்து மட்டத்திலும் மேற்கொள்ளல்.
 3. பிரதான செயலாளர் காரியாலயத்திற்குட்பட்ட வாகனங்களை கொள்வனவு செய்தல், உரிமை மாற்றுதல், பழுதுபார்த்தல் உட்பட அனைத்து கருமங்களும்.
 4. பிரத்யேக விலை அடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப் பத்திரம் வழங்கல்.
 5. சுற்றுவளய பங்களாக்கள் தொடர்பான கருமங்கள்.
 6. செயலாளர் காரியாலயத்திற்குட்பட்ட அனைத்து உத்யோகத்தர்களினதும் கடன்கள் தொடர்பான பணிகள்.
 7. பாரளுமன்ற கேள்விகளுக்குப் பதிலளித்தல்.
 8. வர்தமானியில் பிரசுரிக்கப்படுவதற்கான அறிவுறுத்தல்களைத் தயாரித்தல்.
 9. பாராளுமன்ற அல்லது சபைக் கூட்டங்கள் தொடர்பான கருமங்கள்.
 10. மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான சுற்றுநிருபங்களை கௌரவ ஆளுனரின் அனுமதிக்காகச் சமர்ப்பித்தல்.
 11. விடுமுறை நாட்கள் மற்றும் மேலதிக வேலை தொடர்பான கொடுப்பனவுகளைத் தீர்மானித்தல்.
 12. நஷ்ட ஈடுகள் வழங்குதல் தொடர்பான பணிகள்.
 13. மொழித் தேர்ச்சிக்கான கொடுப்பனவுகளை வழங்குதல்.
 14. ஊழியர் அடையாள அட்டை வழங்குதல்.
 15. பிணய வைப்புக்கள் தொடர்பான கருமங்கள்.
 16. முதலமைச்சரின் நிதி தொடர்பான பணிகள்.
 17. நிர்மாணப் பணிகள் தொடர்பான கருமங்கள்.
 18. பொது மக்களின் புகார்கள் தொடர்பாக கடமையாற்றல்.s

 


சட்டப் பிரிவு

 1. மாகாண சபையின் கீழான அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் நிலுவையுளுள்ள வழக்குகளில் ஒத்துழைப்பு வழங்குதல். தேவையான போது அரச மற்றும் தனியார் வக்கீல்களை நியமித்தல்.
 2. திணைக்களங்களுக்கும் அமைச்சுக்களுக்குமான சட்ட ஆலோசனைகளை வழங்குதல்.
 3. மாகாணத்தின் சாசனத்தினை உருவாக்குவதில் ஒத்துழைத்தல்.
 4. அமைச்சுக்ள் மற்றும் திணைக்களங்களின் விடயங்கள் தொடர்பாக ஏதேனும் விதிமுறைகளை மாற்றுதல் அல்லது உருவாக்குதல் தொடர்பாக உதவிகளை நல்குதல்.

 

 

இலக்கு

மத்திய மாகாணத்தில் வழங்குனர்களை பதிவூ செய்தல் 2017

supplier register

மத்திய மாகாணத்தில் வழங்குனர்களை பதிவூ செய்தல் 2017 Download PDF

முன் பிள்ளை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

முன் பிள்ளை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

அழைப்பிதழ்கள் அழைப்பு - வடிவமைப்பு மற்றும் உருவாக்க

Design and Build - Construction of Tourism Promotion Centre at Gatambe, Peradeniya

Contruction

பொது சேவை மேலாளர்கள் விவரங்கள் (ICT)

பராமரிப்பு ஒப்பந்தக்காரர்கள் பெயர் பட்டியல்

நிதி கட்டுப்பாடுகளை 2008

வெளிநாட்டு புலமைப் பரிசில் மற்றும் வெளிநாட்டு பயிற்சி வேலைத்திட்டம்

scholarship program

Training Programs

பார்வையாளர்கள்

இன்று59
நேற்று67
இந்த வாரம்59
இந்த மாதம்2133
அனைத்து நாட்கள்71454

Visitor IP : 54.196.105.189 Visitor Info : Unknown - Unknown திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2017 12:02

Guests : 14 guests online Members : No members online
Powered by CoalaWeb

எங்களை தொடர்பு

மத்திய மாகாண பிரதம செயலாளர்
மத்திய மாகாண சபை வளாகம்
யாருடைய பந்துகளில், குந்தா விற்பனை
20168, இலங்கை

மின்-அஞ்சல்: info@cs.cp.gov.lk    
தொலைபேசி:  +94 812 420705
தொலைநகலி:  +94 812 422629

Joomla templates by Joomlashine