Homeதிணைக்களங்கள்மாகாணத் திரைசேரிகணக்குகள் மற்றும் கொடுப்பனவு திணைக்களம்

கணக்குகள் மற்றும் கொடுப்பனவு திணைக்களம்

The Department of Financeமாகாண வரவு செலவுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான கண்கீட்டு உதவிகளை மாகாண அமைப்புகளுக்கு வழங்குகின்ற பணியை கணக்குகள் மற்றும் கொடுப்பனவுத் திணைக்களம் மேற்கொள்கிறது. இது அனைத்துக் கண்கிட்டுப் பிரிவுகளிலிருந்தும் தரவுகளைத் திரட்டி புள்ளி விபர ரீதியிலான தகவல்களை உருவாக்குவதற்கானதொரு தரவுத் தளத்தினை பராமரித்து வருகின்றது. பொது நிதி முகாமைக்கான தெளிவுத் தன்மையையும், உத்தரவாதத்தையும் உறுதி செய்வதிலே இத்திணைக்களம் உறுதிகொண்டுள்ளது. மேலும் கணக்கீட்டுத் தகவல்களின் மேம்பாடு, பராமாpப்பு, மற்றும் அமுல்படுத்தல் செயறன்முறைகளுக்கான ஒத்துழைப்பையும் இத்திணைக்களம் வழங்குகிறது. தீர்மானங்களை மேற்கொள்வதற்காக புள்ளிவிபரங்களை விபரிதல் மற்றம் உரை பெயர்த்தல் சேவைகளையும் இத்திணைக்களம் வழங்குகிறது.

 

 

 


இலக்குகளும் செயற்திட்டங்களும்

1 மாகாண நிதியினை சரிவரப் பராமரித்தல்

  • தரவுத் தன்மை மற்றும் உத்தரவாதத்தினூடாக பொது நிதியின் வினைத்திறன் மிக்க பயன்பாட்டினை உறுதி செய்வதற்காக மாகாண நிதிகள் மற்றும் பொறுப்புகளை மேற்ப்பார்வை செய்தலும் நியாயப்படுத்தலும்

    • மாகாணத்தின் அணைத்து நிதிக் கொடுக்கல் வாங்கல்களையும் தினமும் பதிவு செய்தலும் அது பற்றிய அறிக்கைகளைச் சமர்ப்பித்தலும் இத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் முக்கியமானதொரு கருமமாகும்.
    • உருவாக்கப்பட்ட முன்னுரிமை அடிப்படையில் துணை நிகழ்ச்சித் திட்டங்களுக்கான செலவினைப் பராமரித்தல்
    • முக்கியமான சேவைகளுக்காக நிதியினை பொருத்தமான முறையில் ஒதுக்கீடு செய்வதற்கான திட்டங்களை வகுத்தல்
    • அனைத்துத் திணைக்களங்களுக்குமான போதிய நிதியினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்
    • முன்னுரிமை அடிப்படையில் திணைக்களங்களுக்கு நிதி பகிர்ந்தளிப்புக்கான நடிவடிக்கைகளை எடுத்தல்
    • திணைக்களகங்கள் தமது நிதியறிக்கைகளை உரிய நேரத்திற்க்கு வழங்குவதை உறுதிப்படுத்துதல்
    • நிதிக்கூற்று அறிக்கைகளை ஆராய்ந்து அறிக்கையிடல்
    • உதவி தேவைப்படும் திணைக்களங்களுடன் தொடர்பினை ஏற்படுத்திச் செயற்படுதல்
    • திணைக்களங்களுக்கிடையிலான சமனிலையினைப் பேணுதல்
    • திணைக்களங்களின் விணைத்திறனைக் கூட்டுவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை வகுத்தல்

 

  • வருமானங்கள், நிதிக்கொடுப்பனவுகள் மற்றும் கடன்களின் ஊடாக நிதி வருடத்தின் பொதுச் செலவினங்களுக்கான நிதிவழங்களுக்காக விணைத்திறன் கொண்டதும் செயற்திறன் மிக்கதுமானதொரு பண முகாமைத்துவ முறையை அமுல்படுத்தல்

    • அரசாங்கத்தின் செலவுகளை குறைப்பதற்காக சரியான முதலீட்டு நடவடிக்கைகளை பரிந்துரை செய்தல்
    • நிதி முகாமைத்துவ திட்டத்தினைத் தயாரித்தலும் அமுல்படுத்துதலும்
    • நிதி முகாமைத்துவ தந்ரோபாயங்களை தயாரித்தலும் மீளாய்வூ செய்தலும்
    • குறித்த முதலீடுகளுக்கேற்ப நிதி குறை நிரப்புகளை மேற்கொள்ளுதல்
    • திணைக்களங்களின் அனுமதிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கிணங்க நிதியினை ஒதுக்கீடு செய்தல்
    • மேலதிக நிதியினை விணைத்திறன்மிக்க வகையில் பயன்படுத்துவதனை உறுதிப்படுத்துதல்
    • குறித்த பிரிவுக்கு / பகுதிக்கு உரித்தான கடமைகளை இணங்கண்டு ஊழியர்களுக்கான கடமைப் பட்டியலைத் தயாரிக்க உதவுதல்
    • வருமானங்கள் மற்றும் நிதிக்கொடுப்பனவுப் பிரிவினை சினேக பூர்வ சேவை நிறுவனமான மாற்றும் பொருட்டுச் செயற்படுதல்
    • தொடர்ச்சியான மேற்பார்வையின் மூலம் மத்திய மயப்படுத்தப்பட்ட வங்கிச் சேவையினை வழங்குதல்
    • திணைக்கள ரீதியாக நிதிக் கொடுக்கல் வாங்கல்களை நெறிமுறைப்படுத்திச் செயற்படுதல்
    • வருடாந்த வரவு-செலவு திட்டத்திற்கேற்ப மாகாண நிதித் தேவைகளை நிர்வகிக்கும் முகமாகச் செயற்படல்

 

  • அடுத்து வரும் நான்கு ஆண்டுகளிலே தரம் வாய்ந்ததொரு கணக்குப் பரிசோதனை அறிக்கையையும், மட்டுப்படுத்தப்பட்ட சிக்கல்களையும் கொண்டிருத்தல்

    • ஊழியர்களுக்கான முறையான பயிற்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தல்
    • திணைக்கள அறிக்கைகளை பரீசீலித்தலும் மீளாய்வு செய்தலும்
    • மாகாண நிதி நடவடிக்கைத் திட்டத்திற்கிணங்க வளங்களைப் பிரயோகிக்கும் திணைக்களங்கள் குறித்து மேற்பார்வை செய்தல்
    • திணைக்களங்களினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளின் தரத்தினைப் பரிசீலனை செய்தல்
    • சரியான நிதிக்கூற்று அறிக்கையினைத் தயாரித்தல்
    • மாதாந்த வங்கி மீதி அறிக்கையினைத் தயாரித்தலும் மேற்பார்வை செய்தலும்
    • அனைத்துக் குறை நிரப்பு ஆவணங்களையும் பாதுகாத்தல்
    • கணக்குகளை நீக்குதல்
    • கடன் பெறுவோருக்கான துல்லியமான கொடுப்பனவினை உறுதிப்படுத்துதல்
    • தொழிலாளர்களின் சரியான நேரத்தின் தன்மையை அடியொட்டிய கொடுப்பனவினை உறுதிப்படுத்துதல்
    • கணக்குகள் மற்றும் திட்ட அறிக்கைகளை விணைத்திறன்மிக்க் வகையில் பயன்படுத்தல்
    • மாதாந்த நிதி மீளாய்வு கூட்டங்களை நடத்துதல்

 

2 மாகாண நிதித் தகவல்களின் மையமாக விசேட திறன் கொண்டிருத்தல்

  • நிதித் தகவல்களின் முகாமைத்துவ மையத்தினை அமைத்தல்

    • கணணி மயப்படுத்தப்பட்ட நிதித் தகவல் மையமொன்றினை நிர்மாணித்தல்
    • கொடுக்கல் வாங்கல்களுக்கு உதவும் முகமாக கணணி மயப்படுத்தப்பட்ட வங்கி முறையொன்றினை உருவாக்குதலும் நிர்வகித்தலும்
    • கணணி மயப்படுத்தப்பட்ட தகவல் மையத்தினைப் பயன்படுத்தி மனித வள முகாமைத்துவத் திட்டத்தினை அமுல்படுத்துதல்

 

  • தீர்மானம் மேற்கொள்வதற்கான நிதி முகாமைத் தகவல்கள்

    • நாட்டின் கணக்கியல் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப கணக்கியல் நடவடிக்கைகளை மேற்கொள்கொ1ள்ள திணைக்களங்களுக்கு உதவுதல்
    • திணைக்களங்களின் கணக்குகளை புதுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான உதவிகளை நல்குதல்
    • நிதிக் கூற்றறிக்கைகளை ஆராய்ந்தறிவதன் ஊடாக அவற்றின் தரத்தினை கூட்ட உதவுதல்
    • வருடாந்த நிதி கூற்று அறிக்கைகளை பதிவு செய்தலும் வெளியிடுதலும். அதனூடாக மாகாண நிறுவனங்களுக்கு தமது வருடாந்த வரவு-செலவு திட்டத்தினைத் தயாரிப்பதற்கு உதவுதல்
    • பொருத்தமான நுட்பங்களைக் கண்டறிவதற்காக கணக்கியல் முறைமைகளில் பயிற்சி நெறிகளுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்
    • முறையான பதிவு செய்தல் முறையொன்றினை உருவாக்குதலும் அதனைச் சரிவரப் பராமரித்தலும்

 

  • திணைக்களங்களுக்கும் மற்றும் பொதுச் சொத்துகளுக்கும் நிதி முகாமை உதவிகளை வழங்குதல்

    • மாகாணத்தில் ஏற்கனவே இருக்கும் நிதி முகாமைத்துவத் தகவல் முறையினைச் சரிவரப் பராமரித்தல்
    • புதிய நிதி முகாமைத்துவத் தகவல் முறையினை அமுல்படுத்தலும் மீளாய்தலும்
    • நிதி தொடர்பான தகவல்களை வழங்குவதன் மூலம் மாகாண தீர்மானம் எடுத்தல் முறைக்கு உதவுதல்
    • தொழிநுட்ப உதவிகளை வழங்குதற்கான ஒரு மாகாண உதவி ஒன்றியத்தினை அமைத்தல்

மத்திய மாகாணத்தில் வழங்குனர்களை பதிவூ செய்தல் 2017

supplier register

மத்திய மாகாணத்தில் வழங்குனர்களை பதிவூ செய்தல் 2017 Download PDF

முன் பிள்ளை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

முன் பிள்ளை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

அழைப்பிதழ்கள் அழைப்பு - வடிவமைப்பு மற்றும் உருவாக்க

Design and Build - Construction of Tourism Promotion Centre at Gatambe, Peradeniya

Contruction

பொது சேவை மேலாளர்கள் விவரங்கள் (ICT)

பராமரிப்பு ஒப்பந்தக்காரர்கள் பெயர் பட்டியல்

நிதி கட்டுப்பாடுகளை 2008

வெளிநாட்டு புலமைப் பரிசில் மற்றும் வெளிநாட்டு பயிற்சி வேலைத்திட்டம்

scholarship program

Training Programs

பார்வையாளர்கள்

இன்று59
நேற்று67
இந்த வாரம்59
இந்த மாதம்2133
அனைத்து நாட்கள்71454

Visitor IP : 54.196.105.189 Visitor Info : Unknown - Unknown திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2017 12:00

Guests : 8 guests online Members : No members online
Powered by CoalaWeb

எங்களை தொடர்பு

மத்திய மாகாண பிரதம செயலாளர்
மத்திய மாகாண சபை வளாகம்
யாருடைய பந்துகளில், குந்தா விற்பனை
20168, இலங்கை

மின்-அஞ்சல்: info@cs.cp.gov.lk    
தொலைபேசி:  +94 812 420705
தொலைநகலி:  +94 812 422629

Joomla templates by Joomlashine