இலங்கையின் அரசியலமைப்பில் 1988 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக மத்திய மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்டது.
பிரதான செயலாளர் காரியாலயம், மத்திய அரசாங்கத்துடன் சிறந்த ஒருங்கிணைப்பினை பேணி வருவதுடன் மாகாண சபையின் கீழ் உள்ள அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் பிற நிறுவனங்களால் மாகாண மக்களுக்குப் பயனுள்ள மற்றும் விணைத்திறன்மிக்க சேவையை வழங்குவதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள், மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு என்பவற்றைச் செயற்படுத்துகிறது.