இந்த நிறுனம் பிரதான செயலாளர் அலுவலகத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். மத்திய மாகாண சபையின் நிவாகத்தின் கீழ் வரக்கூடிய மற்ற திணைக்களங்களின் ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கு இது பொறுப்பாகும். இது பல நடவடிக்கைகளின் மையமாகவும் இந்நடவடிக்கைகளை ஒன்றிணைக்கக் கூடியதாகவும் தொழிற்படுகிறது. இது கையாளும் தொழிற்பாடுகளின் தன்மைக்கேற்க அதாவது சட்ட நடவடிக்கைகள் முதல் ஒன்றிணைப்பு செயற்பாடுகள் வரை எண்ணிலடங்காத சிக்கலான சந்தர்ப்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இந்த முறையான விஞ்ஞான ரீதியான அனுகுமுறை மூலமே இந்த பிரச்சினைகளைக் கையாள முடியும் என கிளை விளங்கி வைத்துள்ளது. எனவே, திணைக்களமானது அதனால் முடியுமான அளவு அதனது கடமைகளை நிறைவேற்றி மற்ற மாகாணங்களில் உள்ள இது போன்ற திணைக்களங்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளது.