மாகாணத் திரைச்சேரியானது அமைச்சுகளுக்கு மூலோபாய நிதி உதவிகளை வழங்குவதன் மூலமும், நிதி வளங்கள் கிடைக்கப்பெறுகின்ற தன்மையை விருத்தி செய்வதன் மூலமும் மத்திய மாகாணத்திலே எதிர்பார்க்கப்பட்ட சமூக, பொருளாதார மற்றும் நல்லாட்சியின் விளைவுகளை எய்துவதிலே பெரும்பங்கு வகிக்கிறது. இது மாகாணத்தின் கடன் பெறல் மற்றும் நிதி வழங்கல் ஆகியவற்றைக் கண்காணிப்பதும் வங்கி நடவடிக்கைகள் மற்றும் பணம் என்பவற்றையும் முகாமைப்படுத்துகின்றது. இந்நடவடிக்கைகள் அனைத்து அமைச்சுக்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. கீழ்வரும் திணைக்களங்கள் மாகாணத் திரைசோரியின் கீழ் இயங்கி வருகின்றன.